முதற்பக்கம் » துறை » புதிய அறிவிப்புகள் - 2012 - 2013
செய்தி மற்றும் விளம்பரம்
மானியக் கோரிக்கை எண் - 28
புதிய அறிவிப்புகள்
2012-2013

1. செய்திப் படங்கள் மின்னணு முறைப் பாதுகாப்பு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தமிழ்நாடு திரைப்படப் பிரிவு செய்திப்படங்கள் மின்னணு முறையில் (Digitalize) ரூபாய் 75 இலட்சம் மதிப்பீட்டில் பாதுகாக்கப்படும்.

2. முன்காட்சித் திரையரங்கம் நவீனமயமாக்கம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்திலுள்ள முன்காட்சித் திரையரங்கம் (Preview theatre) ரூபாய் 1.54 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.

3. புகைப்படச் சுருள்கள் மின்னணு முறைப் பாதுகாப்பு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் புகைப்படச் சுருள்கள் (Photo negatives) மின்னணு முறையில் (digitalize) ரூபாய் 15.89 இலட்சம் மதிப்பீட்டில் பாதுகாக்கப்படும்.

4. அண்ணல் காந்தியடிகள் திருவுருவச் சிலை சீரமைத்தல்

சென்னை காமராஜர் சாலையிலுள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவச் சிலை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, ரூபாய் 26.95 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

5. தமிழரசு காலாண்டு ஆங்கில இதழ் மாத இதழாக மலரும்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, காலாண்டு இதழாக வெளி வந்த தமிழரசு ஆங்கில இதழ், இனி மாத இதழாக வெளியிடப்படும். இப்பணிக்காக சிறப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், பிழை திருத்துபவர், கணினி இயக்குபவர் (DTP Operator) உள்ளிட்ட நான்கு புதிய பணியிடங்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தோற்றுவிக்கப்படும்.

6. தமிழரசு அச்சகத்திற்கு நவீன இயந்திரம்

வளர்ந்து வரும் மாற்றங்களுக்கேற்ப தமிழரசு அச்சகத்தில் அச்சுப்பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, கணினியிலிருந்து நேரடியாக பிளேட் செய்யும் வசதி கொண்ட CTP (Computer to plate) நவீன தொழில்நுட்ப இயந்திரம் ரூபாய் 90 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

7. சிப்பம் கட்டும் பணிகளுக்குப் புதிய இயந்திரங்கள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, தமிழரசு அச்சகத்தில் சிப்பம் கட்டும் (Binding) பணிகளை மேற்கொள்ள நிலைச்சிப்பம் (Perfect Binding) இயந்திரம், மேற்கோள் பிரிவுக்கு நெளிச்சிப்பம் (Comb, Spiral Binding) இயந்திரம் ஆகியவை ரூபாய் 11 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும்.

8. விழா நிகழ்ச்சிகளை உடனுக்குடன் ஒளிபரப்ப புதிய ஒளிபரப்புக் கருவி

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, முக்கிய விழா நிகழ்ச்சிகளை உடனுக்குடன் ஒளிபரப்ப ஏதுவாக தமிழ்நாடு திரைப்படப் பிரிவுக்கு 4 நேரடி ஒளிபரப்புக் கருவிகள் (Live back bag) ரூபாய் 18 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

9. வேலூர் அண்ணா கலையரங்கம் குத்தகைக்கு விடுதல்

வருவாய் இழப்பில் இயங்கி கொண்டிருக்கும் வேலூரிலுள்ள அண்ணா கலையரங்கத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, குத்தகைக்கு விட உரிய விதிமுறைப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

10. செய்தி வெளியீடு மற்றும் மேற்கோள் பிரிவுகளுக்கு புதிய மோட்டார் சைக்கிள் வாகனங்கள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, தலைமையகத்தில் செய்தி வெளியீட்டுப் பிரிவிலிருந்து ஊடகங்களுக்கு செய்தி மற்றும் புகைப்படங்கள் எடுத்துச் செல்லவும், மேற்கோள் பிரிவிலிருந்து செய்தி நறுக்குகள் எடுத்துச் செல்லவும் புதிதாக இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பணியிடங்கள் காலமுறை ஊதியத்தில் உருவாக்கப்படும். இதற்கென இரண்டு புதிய மோட்டார் சைக்கிள் வாகனங்கள் வாங்கப்படும். தொடர் செலவினமாக ரூபாய் 4.80 இலட்சம், தொடராச் செலவினமாக ரூபாய் 1.20 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

11. மின்னணு விளம்பரத் திரைகள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், தொடராச் செலவினமாக ரூபாய் 68 இலட்சம், ஆண்டுக்கு தொடர் செலவினமாக ரூபாய் 38.40 இலட்சம் மதிப்பீட்டில் மின்னணு விளம்பரத் திரைகள் (Digital Display Screens) நிறுவப்படும்.

12. சாதனை விளக்கக் குறும்படங்கள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் துறை சாதனைகள் குறித்து அந்தந்த அரசுத் துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள், விளம்பர பணிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்படும் விளம்பரம் மற்றும் IEC நிதியிலிருந்து தமிழ்நாடு திரைப்படப்பிரிவின் மூலம் சாதனை விளக்கக் குறும்படங்கள் தயாரிக்கப்படும்.

13. புதுடெல்லி செய்தி நிலையத்தில் புதிய பணியிடங்கள்

புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செயற்படும் செய்தி நிலையத்திற்கு, செய்தி மற்றும் விளம்பரப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி,ஒரு வீடியோ ஒளிப்பதிவாளர் மற்றும் ஓர் இளநிலை புகைப்படக்காரர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும்.

14. பத்திரிகையாளர் அறை பராமரிப்பு

பத்திரிகையாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, தலைமைச் செயலகத்திற்கு செய்தி சேகரிக்க வருகைதரும் பத்திரிகையாளர்களுக்கு உதவிடும் வகையில், பத்திரிகையாளர் அறையை சிறந்த முறையில் பராமரிக்க புதிதாக இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

15. திருப்பூர், அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய ஜீப்புகள்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின் படி, திருப்பூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களுக்கு இரண்டு புதிய ஜீப்புகள் வழங்கப்படும். இதற்கென காலமுறை ஊதியத்தில் புதிதாக இரண்டு புதிய ஓட்டுநர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.

கே.டி. ராஜேந்திரபாலாஜி
மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள்
செயலாக்கத்துறை அமைச்சர்

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்