முதற்பக்கம் » பிரிவுகள் » பொருட்காட்சிப் பிரிவு

"ஏழை, எளிய மக்களுக்கு ஒரு புறம் சலுகைகளை வழங்குவதும் மறுபுறம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அவர்களே வாங்கிக் கொள்ளும் வகையில், அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்துவதும் ஆகிய இரு வேறு நிலைகளில், பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு மேற்கொண்டு வருகிறது."

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
பொருட்காட்சிப் பிரிவு

அரசுப் பொருட்காட்சிகள்

கேட்பதைவிட, பார்ப்பது மக்கள் மனதில் எளிதில் பதியும் என்பதால் செய்தி-மக்கள் தொடர்புத் துறை பொருட்காட்சிப் பிரிவின் மூலம் நடத்தப்படும் அரசுப் பொருட்காட்சிகளால் அரசின் அனைத்துத் திட்டங்கள், சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை மக்கள் நேரடியாக எளிதில் அறிந்து கொள்ள இயலும் என்பதாலும், பொதுமக்கள் மாவட்டங்களில் நடைபெறும் பொருட்காட்சிக்கு குடும்பத்துடன் வருகை தந்து கண்டுகளித்துப் பயன்பெறவும், விழாக்காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மாவட்ட தலைநகரங்களில் பொருட்காட்சிகளை நடத்தினால், பெரிதளவில் மக்கள் வருகை தந்து பயன்பெற்றிட ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையிலும் அரசுப் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பொருட்காட்சிகளில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு அரசால் நடத்தப்படும் பொருட்காட்சிகள் மக்களுக்கு பொழுதுபோக்காக அமைவதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பை அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இப்பொருட்காட்சிகளில் நலிந்த கலைஞர்களின் வாழ்க்கை வளம் பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பொருட்காட்சி ஆண்டுதோறும் கோயம்புத்தூர், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், இரண்டாண்டுக்கு ஒரு முறை வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் நடைபெற்று வந்தன. தற்போது வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படுகின்றன.

சிறந்த முறையில் அரசுப் பொருட்காட்சிகளில் பங்குபெறும் அரசுத் துறைகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த அரசுத் துறை அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தனியார் பொருட்காட்சிகள்

தனியாரால் வணிக நோக்குடன் வரைமுறைகளின்றி நடத்தப்பட்டு வந்த பொருட்காட்சிகள் முறைப்படுத்தப்பட்டு, பொது மக்களின் நன்மைக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் விதிமுறைகள் வகுக்கப்பட்டு, மாவட்டங்களில் தனியார் பொருட்காட்சிகள் முறையாக நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் செய்தி-மக்கள் தொடர்புத்துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

புதுடெல்லி மலர்ப்பேரணி

இந்தியத் துணை கண்டத்தின் ஒருமைப்பாடு, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் புதுதில்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர்ப்பேரணி விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்தி-மக்கள் தொடர்புத் துறை தொடர்ந்து பங்கேற்று வருகிறது.

குடியரசு நாள் விழா அலங்கார ஊர்திகள்

சென்னை மற்றும் புதுடெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு நாள் விழாவில், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் கலந்து கொள்வதும், சென்னையில் நடைபெறும் குடியரசு நாள் விழாவில், அரசின் பல்வேறு திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில், அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடத்திட ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வதும் இத்துறையின் பங்களிப்பாகும்.

தொழில் மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடைபெறும் அகில இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் இத்துறை பங்கேற்று, அரசின் கொள்கைகள், நலத்திட்டங்கள், அரசின் சாதனைகள் குறித்த விளக்கங்களை பொதுமக்கள் எளிதில் அறிந்திடும் வகையிலும், மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையிலும், விளக்கப்படங்கள் மற்றும் காட்சி மாதிரிகளுடன் தனி அரங்கு அமைத்து பாராட்டுகளை பெற்றுவருகிறது.

புதுடெல்லி அகில இந்திய பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி

புதுடெல்லியில் நடைபெறும் அகில இந்திய பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியிலும், தமிழகத்தின் சார்பில் இத்துறை ஆண்டுதோறும் பங்கேற்று தமிழக அரசின் அனைத்துத் துறைகள் தொடர்பான கொள்கை விளக்கங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த விளக்கங்கள் வெளிக்கொணரப்பட்டு வருகிறது. இப்பொருட்காட்சிகள் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் அரசுக்கு வருவாய் கிடைக்கவும் வழி வகுக்கிறது.

பல்துறை பணிவிளக்க முகாம்கள்

அரசின் பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து, அரசுத் துறைகளின் சார்பில் அரங்குகள் அமைத்து, அரசின் திட்டங்களையும், சாதனைகளையும், கொள்கை விளக்கங்களையும், பொது மக்களுக்கு விளக்கக்கூடிய வகையில், பல்துறை பணி விளக்க முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில், கிராமங்களில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் மனு நீதி நாள் முகாம் நிகழ்ச்சிகளின் போதும் சிறிய அளவிலான பல்துறை பணி விளக்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஒன்றியங்களில் சிறு கண்காட்சிகள்

தமிழக அரசின் நலத்திட்டங்கள், சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர்த்த 31 மாவட்டங்களில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசின் சாதனையை விளக்கும் வகையில் சிறு கண்காட்சியினை நடத்த மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டவாறு ஊராட்சி ஒன்றியங்களில் சிறு கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

புகைப்படக் கண்காட்சிகள்

மாவட்டங்கள் தோறும் திருவிழாக்கள், மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் பங்குகொள்ளும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள் ஆகியவற்றில் அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புகைப்படக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்டங்களில் திருவிழாக்களில் நடத்தப்படும் புகைப்படக்கண்காட்சிகள்

வ.எண். திருவிழா நடைபெறும் இடம், மாவட்டம்
1. கோடை விழா மலர்க் கண்காட்சி ஏற்காடு, சேலம்
2. பழக்கண்காட்சி குன்னூர், நீலகிரி
3. சந்திர சூடேஸ்வரர் தேர்த்திருவிழா ஓசூர்
4. மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரி
5. வாவுபலி பொருட்காட்சி குழித்துறை, கன்னியாகுமரி
6. கோடைவிழா ஏலகிரி, வேலூர்
7. சாரல் விழா குற்றாலம், திருநெல்வேலி
8. கோடைவிழா திருவண்ணாமலை
9. கார்த்திகை தீபத்திருவிழா திருவண்ணாமலை
10. சுந்தரமகாலிங்கம் கோவில் திருவிழா சதுரகிரிமலை, மதுரை
11. வல்வில் ஓரிவிழா கொல்லிமலை, நாமக்கல்
12. கோடைவிழா கல்வராயன்மலை, விழுப்புரம்
13. புனித அன்னை ஆரோக்கிய மாதா திருவிழா வேளாங்கன்னி, நாகப்பட்டினம்
14. அருள்மிகு சுப்பரமணியசுவாமி திருக்கோயில் ஆடிக் கிருத்திகை விழா திருத்தணி, திருவள்ளூர்
15. பனிமய மாதா கோயில் திருவிழா தூத்துக்குடி
16. குருநாத சுவாமி திருவிழா அந்தியூர், ஈரோடு

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்