முதற்பக்கம் » பிரிவுகள் » தமிழ்நாடு திரைப்படப்பிரிவு» தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகள்

"யார் போற்றினாலும், தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே. தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ் மக்களின் வளர்ச்சிதான் என்னுடைய வளர்ச்சி என்கின்ற முறையில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன். "

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகள்

திரைப்பட விருதுகள்

மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த நடிகர், சிறந்த நடிகையர் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் திரைப்பட விருதுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுகள் பெறுவதற்குத் தகுதியான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்வதற்காகத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசு ரூ. 2 இலட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும், இரண்டாம் பரிசு ரூ. 1 இலட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும், மூன்றாம் பரிசு ரூ. 75 ஆயிரம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் சிறப்புப் பரிசு ரூ.75 ஆயிரம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் திரைப்படத்திற்குச் சிறப்புப் பரிசாக ரூ. 1.25 இலட்சம் ரொக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

சிறந்த நடிகர், சிறந்த நடிகையர் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

ஆண் மற்றும் பெண் குரல்வளக் கலைஞர்கள் (Dubbing Artistes), சிறந்த குணசித்திர நடிகர், சிறந்த குணசித்திர நடிகை, சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த நகைச்சுவை நடிகை ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

கலைத்துறை வித்தகர் விருதுகள்

தமிழ்த்திரை உலகில் தமது எழுத்தாலும் நடிப்பாலும் தனிமுத்திரை பதித்த அறிஞர் அண்ணா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், ராஜாசாண்டோ, மக்கள் திலகம் எம்ஜிஆர், கவிஞர் கண்ணதாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரின் பெயர்களில் கலைத்துறை வித்தகர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்விருதுகளைப் பெறுகின்ற கலைத்துறை வித்தகர்களுக்குத் தலா 5 பவுன் தங்கப்பதக்கம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படுகின்றது.

அரசு திரைப்பட மானியம்

சிறிய முதலீட்டில் திரைப்படம் தயாரிப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக, குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தினை இத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அரசால் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு படத்திற்கும் ரூ.7 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. 2007,2008, 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கான, திரைப்பட மானியம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சின்னத்திரை விருதுகள்

மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரும் பங்கு வகிக்கும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள், அதில் பங்கேற்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சின்னத்திரை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த நெடுந்தொடருக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ், இரண்டாம் பரிசு ரூ.1 இலட்சம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ், சிறந்த வாரத் தொடர் ஒன்றிற்கு ரூ.1 இலட்சம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த கதை ஆசிரியர், சிறந்த உரையாடல் ஆசிரியர், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத் தொகுப்பாளர், சிறந்த கதாநாயகன், சிறந்த கதாநாயகி, சிறந்த குணசித்திர நடிகர், சிறந்த குணசித்திர நடிகை, சிறந்த வில்லன் நடிகர், சிறந்த வில்லி நடிகை, சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பின்னணி இசையமைப்பாளர், சிறந்த குரல் வளக் கலைஞர் (ஆண் மற்றும் பெண்), சிறந்த தந்திரக் காட்சியாளர் ஆகியோருக்கு தலா 3 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

மேலும், ஆண்டின் சிறந்த சாதனையாளர், சிறந்த வாழ்நாள் சாதனையாளர் ஆகியோருக்குத் தலா ரூ.1 இலட்சம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்