முதற்பக்கம் » பிரிவுகள் » புகைப்படப் பிரிவு

" மக்களுடைய எதிர்பார்ப்புகளே இந்த அரசின் உந்து சக்தியாகச் செயல்படுகிறது. "

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
புகைப்படப் பிரிவு

புகைப்படப் பிரிவில் புதிய வகை டிஜிட்டல் புகைப்படக் கருவிகள் மூலம் வண்ணப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அவை மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் ஏறக்குறைய 200 ஊடகங்களுக்கு, தலைமைச் செயலகத்திலிருந்து ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அத்துடன் முக்கிய விழாக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பும் வகையில், இணையதள வசதியுடன் கூடிய மடிக்கணினிகள் மூலம் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திலிருந்தே புகைப்படங்கள் உடனுக்குடன் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் குறுந்தகட்டிலும் பதிவு செய்யப்பட்டு அவை எதிர்காலப் பயன்பாட்டிற்கு ஏதுவாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே இப்பிரிவிலுள்ள 75,108 அரிய புகைப்பட நெகட்டிவ் படச்சுருள்களைப் பாதுகாத்து வரிசைப்படுத்தி, தலைப்பிட்டு அவற்றை மின்னணு முறையில் மாற்றும் பணி (Digital Scanning) ரூ.13.25 இலட்சம் செலவில் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள நெகட்டிவ் படச்சுருள்கள் மின்னணு முறையில் மாற்றப்பட்டு வருகின்றன.

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்