முதற்பக்கம் » பிரிவுகள் » செய்தி வெளியீட்டுப் பிரிவு

" நிருவாகம் மற்றும் மேம்பாடு தொடர்பாக அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக ஆக்குவதே எப்போதும் என்னுடைய நோக்கமாகும். "

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
செய்தி வெளியீட்டுப் பிரிவு

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் செய்தி வெளியீட்டுப் பிரிவு 365 நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ஒரு முக்கியப் பிரிவாகும்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செய்தி வெளியீடுகள், செய்திக் குறிப்புகள், அறிவிப்புகள், நலத்திட்டங்கள், ஆக்கப்பணிகள், அரசின் சாதனைகள் குறித்த செய்திகள், அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்கள், அதன் தொடர்புடைய வண்ணப் புகைப்படங்கள் ஆகியவற்றை நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், செய்தி முகமைகள், காலமுறை இதழ்கள் மற்றும் இணையதளச் செய்தி நிறுவனங்கள் என ஏறத்தாழ 200 ஊடகங்களுக்கு நிகரி மற்றும் மின் அஞ்சல் மூலமாக அனுப்பி, மக்கள் உடனுக்குடன் செய்திகளாக அறிந்து கொள்ளச் செய்யும் பணியினைச் செய்தி வெளியீட்டுப் பிரிவு செவ்வனே செய்து வருகிறது.

மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் நடத்தப்பெறும் செய்தியாளர் கூட்டங்களுக்கு உரிய ஏற்பாடுகளையும் இப்பிரிவு செய்து வருகிறது. மேலும் அரசின் முக்கிய அறிவிப்புகளையும் செய்தி வெளியீடுகளையும் மாவட்டங்களில் உள்ள செய்தியாளர்கள் வெளியிடும் வகையில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அனைத்து அமைச்சர்கள், துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ளும் விழாக்கள், முக்கியப் பிரமுகர்களின் வருகை ஆகியவற்றிற்குப் பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர் செய்தி சேகரிக்க அனைத்து ஏற்பாடுகளையும் இப்பிரிவு செய்து வருகிறது.

மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் அரசு விழாக்கள், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள், புகைப்படங்கள், சம்பந்தப்பட்ட மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மூலம் தலைமையிடத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகளில் இடம் பெறச்செய்யவும் மற்றும் வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலி/ஒளிபரப்பச் செய்யவும் இப்பிரிவு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய அரசு ஆணைகள்

வருடம் அரசாணை எண் நாள்
2018 137 01.08.2018
2018 121 30.07.2018
2018 122 30.07.2018
2017 163 21.09.2017
2017 164 21.09.2017
2016 02 11.01.2016
2016 03 11.01.2016
2011 191 14.09.2011
2012 15 25.01.2012
2012 16 25.01.2012
2012 17 25.01.2012
2012 18 25.01.2012
2012 31 08.02.2012
2012 133 24.05.2012
2012 425 19.12.2012
2013 63 18.02.2013
2013 73 07.03.2013
2013 74 07.03.2013
2013 246 07.10.2013
2013 247 07.10.2013

பத்திரிகையாளர் நலன்

பத்திரிகையாளர் ஓய்வூதியம்

இத்திட்டம் 1986 ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பத்திரிகைத் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றி, பணியிலிருந்து ஓய்வுபெற்று, நலிவுற்ற நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.6,000/- வழங்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பத்திரிகையாளர் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஓய்வூதியத்தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்க அறிவுறுத்தியபடி, 07.10.2013 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, தற்பொழுது உயர்த்தப்பட்ட பத்திரிகையாளர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம்

ஓய்வூதியம் பெற்று இயற்கை எய்திய பத்திரிகையாளரின் மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.3,000/- ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதனை ரூ.4,750 ஆக உயர்த்தி வழங்க அறிவுறுத்தியபடி, 07.10.2013 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி

பத்திரிகைத் துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழை திருத்துபவர் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கீழ்க்கண்டவாறு குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது.


பணிபுரிந்த ஆண்டுகள் குடும்ப உதவி நிதி
5 ரூ.50,000 /-
10 ரூ.1,00,000 /-
15 ரூ.1,50,000 /-
20 ரூ.2,00,000 /-

பத்திரிகையாளர் நல நிதியம்

பத்திரிகையாளர் நல நிதியத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி தனியே ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பணியிலிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு கிடைக்கும். வட்டித் தொகையிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000/- வரை மருத்துவ நிதி உதவி அளிக்கப்படுகிறது.

பத்திரிகையாளர்களுக்கு அரசு வாடகைக் குடியிருப்பு வசதி

பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சிறப்பு அடிப்படையில் அரசு வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை வசதி

இத்திட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன.

செய்தியாளர் அங்கீகார அட்டை

அரசு அமைக்கும் “செய்தியாளர் அங்கீகாரக் குழு”வின் பரிந்துரையின் பேரில் ஆண்டுதோறும் நாளிதழ்கள்/ தொலைக்காட்சிகள்/ செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) வழங்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் அட்டை

காலமுறை இதழ்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு, “செய்தியாளர் அட்டை பரிந்துரைக் குழு”வின் பரிந்துரையின் பேரில் செய்தியாளர் அட்டைகள் (Press Pass) வழங்கப்பட்டு வருகின்றன.

இலவசப் பயண பேருந்து அட்டை

செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப் பெற்ற பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு வசதியாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க ஓராண்டு காலத்திற்குச் செல்லத்தக்க வகையில் இலவசப் பயண பேருந்து அட்டை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இலவசப் பயண பேருந்து அட்டைகள் வழங்குவதற்கான தொகையைப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இத்துறை ஈடுசெய்கிறது.


செய்தி முகமைகள்

பிடிஐ (Press Trust of India) மற்றும் யுஎன்ஐ (United News of India) ஆகிய இரண்டு செய்தி முகமைகள் வெளியிடும் செய்திகள் கீழ்க்காணும் இடங்களில் கணினி மூலம் 24 மணிநேரமும் ஆண்டு முழுவதும் பெறப்படுகிறது :

அ) மேதகு ஆளுநர் மாளிகை
ஆ) மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இல்லம்
இ) செய்தி வெளியீட்டுப் பிரிவு, தலைமைச் செயலகம்

புதுப்பிக்கப்பட்ட செய்தியாளர் அறை

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தியாளர் அறை 25 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 3.8.2011 அன்று திறந்து வைத்தார்கள்.

விழா நிகழ்வுகளை இணைய வசதி மூலம் அனுப்புதல்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்களின் நிகழ்வுகள் அடங்கிய வீடியோ படக்காட்சிகளை தலைமைச் செயலகச் செய்தி வெளியீட்டுப் பிரிவிலிருந்து இணைய வசதியில் அனைத்துத் தொலைக்காட்சிகளுக்கும் உடனுக்குடன் அனுப்பி வைக்க ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மென்பொருள் வசதி (Online Media Exchange and Supply Chain Management Solution) ஏற்படுத்த ஆணையிட்டவாறு அரசாணை வெளியிடப்பட்டு இவ்வசதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் ஊடக மையம்

தலைமைச் செயலகத்திற்கு வருகை தருகின்ற பல்வேறு ஊடகங்களிலிருந்து வரும் செய்தியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தங்களது நிறுவனத்திற்கு அனுப்புவதற்கு ஏதுவாக “ஊடக மையம்” அமைத்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டவாறு ரூ.31 இலட்சம் மதிப்பீட்டில் ஊடக மையம் அமைத்திட அரசாணை வெளியிடப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்