முதற்பக்கம் » பிரிவுகள் » மேற்கோள் பிரிவு

" தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிபெற்ற ஒரு முதன்மை மாநிலமாக உருவாக்குவதே என்னுடைய குறிக்கோள் அல்லது கனவாகும். அதனைச் செயல்படுத்துகின்ற போது கனவுகள் உண்மையாகும். முறையாகத் திட்டமிடப்பட்டால் அதுவே பாதி இலக்கை அடைந்தது போல் ஆகும். "

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
மேற்கோள் பிரிவு

பத்திரிகைச் செய்திகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் பணியினைத் தலைமையிடத்தில் உள்ள மேற்கோள் பிரிவு செவ்வனே செய்து வருகிறது.

இப்பிரிவில் நாள்தோறும் வெளிவரும் காலை, மாலை நாளிதழ்கள், காலமுறை இதழ்கள் மற்றும் வெளிமாநில நாளிதழ்களில் வெளியாகும் முக்கியச் செய்திகள், செய்தி நறுக்குகளாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது. மேலும், காலை நாளிதழ்கள் மற்றும் காலமுறை இதழ்களில் வரும் முக்கியச் செய்திகள் மாண்புமிகு அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்களின் பார்வைக்கும், நடவடிக்கைக்கும் தொகுத்து அனுப்பும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.அதே போன்று நாளிதழ்களில் துறைகள் தொடர்பாக வெளிவரும் முக்கிய செய்திகள் ஸ்கேன் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை செயலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நாள்தோறும் காலையில் அனுப்பப்பட்டு வருகின்றது. முக்கியமான தமிழ், ஆங்கில நாளிதழ்கள் முறையாகத் தொகுக்கப்பட்டு, எதிர்காலத் தேவைக்கென இப்பிரிவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், இவை தேவைப்படும்போது மாண்புமிகு முதலமைச்சர், அமைச்சர்கள், துறைச்செயலாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

காலச்சுவடுகளின் தொகுப்பாக விளங்கும் பழைய நாளிதழ்களை நவீன மின்னணு முறையில் எண்மியப்படுத்திப் (Digitization) பராமரிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டவாறு, மேற்கோள் பிரிவில் பராமரிக்கப்படும் நாளிதழ்களில் இடம்பெற்ற முக்கியச் செய்திகளைப் பாதுகாத்திடவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், உரைகள், பேட்டிகள், அரசின் சாதனைகள், வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், அரசாணைகள், நாளிதழ்களின் தலையங்கங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், பல்வேறு தலைவர்களின் கருத்துக்கள் போன்ற தனித்தனித் தலைப்புகளில் செய்திகளைத் தொகுத்துப் பராமரித்திடவும், மின்னணு முறையில் எண்மியப்படுத்தும் (Digitization) பணிகளுக்காக அரசாணை வெளியிடப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்