முதற்பக்கம் » பிரிவுகள் » தமிழ்நாடு திரைப்படப்பிரிவு» தமிழ்நாடு திரைப்படப்பிரிவு

"உங்கள் (மக்கள்) அன்பும், உங்கள் பாசமும் ஒரு கோடித் தடைகளை உடைத்தெறிகின்ற வல்லமையை எனக்குத் தருகின்றன. சக்தி என்பது மக்கள் சக்தி தானே? மின் சக்தி என்றாலும், காந்த சக்தி என்றாலும், அணு சக்தி என்றாலும் அவை எல்லாம் மக்கள் சக்திக்கு அப்புறம்தான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. "

செல்வி ஜெ ஜெயலலிதா
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
தமிழ்நாடு திரைப்படப்பிரிவு

செய்திப்படப்பிடிப்பு

தமிழ்நாடு திரைப்படப்பிரிவு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் அரசின் முக்கியமான நிகழ்ச்சிகளை வீடியோ மூலம் ஒளிப்பதிவு செய்து அவற்றைத் தொகுத்து செய்தி மலராக வெளியிடும் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

வீடியோ செய்திமலர்கள்

தமிழ்நாடு திரைப்படப்பிரிவு தன்னுடைய முக்கியப் பணியாக, தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், அறிவிப்புகள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வீடியோ செய்தி மலர்களைக் குறுந்தகடுகளில் தயாரித்து, அனைத்து மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகங்களுக்கும் அனுப்பி, பொதுமக்கள் கூடும் இடங்களில் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வீடியோ வாகனங்கள் மூலமாக கள விளம்பரப் பணியைச் செய்து வருகிறது.

திரைப்படப் படச்சுருள் செய்திமலர் (Film News Reel)

வீடியோவில் படப்பிடிப்பு செய்தவற்றை 10 நிமிடப் படமாகத் தொகுத்து அவற்றை வீடியோவிலிருந்து 35 மி.மீ. திரைப்படப் படச்சுருளில் மாற்றம் செய்யப்படுகிறது. பின்னர் இந்தத் திரைப்படச் சுருள் செய்தி மலர் மத்திய அரசின் திரைப்படத் தணிக்கைக் குழுச் சான்றிதழ் பெற்று, பிரதிகள் எடுக்கப்பட்டு மத்திய அரசு திரைப்படப்பிரிவின் சென்னை மற்றும் மதுரைக் கிளைகளின் மூலமாகத் தமிழகத்திலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் சுழற்சி முறையில் திரையிடப்படுகின்றது.

குறும்பாடல்கள் (Jingles)

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் மனதை ஈர்த்து அவர்களது மனதில் ஆழப் பதியும் வண்ணம் 20 நொடிகள் கொண்ட மிகக் குறுகிய கால அளவிலான குறும்பாடல்களை தமிழ்நாடு திரைப்படப்பிரிவு தயாரித்து வழங்குகிறது.

க்யூப் (Qube) டிஜிட்டல் தொழில்நுட்பம்

முந்தைய காலங்களில் திரையரங்குகளில் கார்பன் குச்சி கொண்ட ஒளி வீழ்த்திகள் மூலம் 35 மி.மீ திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்த நிலையை மாற்றி, விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக க்யூப் டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் கணினி வன்பொருள் வட்டு (Hard Disc) மற்றும் செயற்கைக் கோள் வழியாக தற்போது திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள மொத்த திரையரங்குகளில் 60 சதவீதத்திற்கும் மேலாக க்யூப் (Qube) டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ள திரையரங்குகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு திரைப்படப் பிரிவில் 35மி.மீ திரைப்படச்சுருள் செய்தி மலர்கள் தயாரிக்கப்பட்டு வந்த காரணத்தால், இதுவரை க்யூப் (Qube) டிஜிட்டல் தொழில் நுட்பம் கொண்ட திரையரங்குகளில் செய்தி மலர்களை திரையிட முடியாத நிலை இருந்து வந்தது. இதனை மாற்றி கடந்த பிப்ரவரி மாதம் முதல் “தானே புயல்” நிவாரணச் செய்திமலர் பற்றிய கருத்து விளக்கப் படத்திலிருந்து, க்யூப் (Qube) டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்படுவதற்கு ஏதுவாக வன்பொருள் வட்டாக (Hard Disc) மாற்றி வழங்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 100 சதவீதம் தமிழ்நாடு திரைப்படப் பிரிவு செய்தி மலர்கள் வெளியிடுவது உறுதி படுத்தப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விழா நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவை குறித்த விவரங்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

   செய்திகள்

மேலும் »

ஊடகங்கள்
துறை
ஆவணங்கள்
முதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்
மேலே
© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.
தொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்